/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேய்ச்சல் நிலத்தில் மது பாட்டில்கள் விவசாயிகள் அதிருப்தி
/
மேய்ச்சல் நிலத்தில் மது பாட்டில்கள் விவசாயிகள் அதிருப்தி
மேய்ச்சல் நிலத்தில் மது பாட்டில்கள் விவசாயிகள் அதிருப்தி
மேய்ச்சல் நிலத்தில் மது பாட்டில்கள் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஆக 09, 2024 02:39 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்தில், பல இடங்களில் மேய்ச்சல் நிலம் அருகே மது பாட்டில்கள் கிடப்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி, பெரும்பாலும் விவசாயம் சார்ந்துள்ளது. இப்பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் கால்நடைகள் வளர்க்கின்றனர். கூலித்தொழிலாளர்கள் வருவாய் பெறும் வகையில் கறவை மாடுகள் வளர்க்கின்றனர்.
ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு, குட்டை மற்றும் நீர்நிலை ஓரத்தில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் ரோட்டோரத்தில் அங்கங்கே, காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு கொட்டிக்கிடப்பதால், ரோட்டோரத்தில் உள்ள புற்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
சில நேரத்தில், கால்நடைகள், புற்களுடன் சேர்த்து பிளாஸ்டிக் பொருட்களை உணவாக உட்கொள்கின்றன. உடைந்த மது பாட்டில்கள், கால்நடைகளின் காலில் குத்தி, குழாம்புகளில் காயம் ஏற்படுகிறது. இதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது.
காயம் அடைந்த ஆடுகளை இருசக்கர வாகனங்களில் எளிதாக எடுத்து சென்று மருத்துவம் பார்க்க முடியும். ஆனால், மாடுகளை அழைத்து செல்வதில் பல சிரமங்கள் இருப்பதால், கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை உள்ளது.
இதை தவிர்க்க, கிராமப்புறங்களில் ரோட்டோரத்திலும், புல்வெளியிலும் காலி மது பாட்டில்களை வீசுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.