ADDED : ஜூன் 01, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
சூலுார்: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞரணி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சூலுாரில் நடந்தது. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் பெற்ற, பயிர் கடன்கள் அனைத்தையும், த.வெ.க., அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஏர் முனை இளைஞரணி நிர்வாகி சுரேஷ், அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி குறித்து விளக்கி பேசினார்.
மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சந்திர சேகர், மாவட்ட தலைவர் மாணிக்க ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில், சூலுார் எம்.எல்.ஏ., விடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
