UPDATED : ஜூன் 01, 2026 05:08 PM
ADDED : ஜூன் 01, 2026 04:51 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி (30 கிலோ பெட்டி) --- 950, தேங்காய் (ஒன்று) --- 30, கத்திரிக்காய் கிலோ - 53, முருங்கைக்காய் --- 45, வெண்டைக்காய் -- 15, முள்ளங்கி - 16, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 25, புடலை - 15, சுரைக்காய் - 15, பீர்க்கங்காய் - 40, வெள்ளரிக்காய் - 15, அவரைக்காய் - 70, மற்றும் பச்சை மிளகாய் - 65 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், தக்காளி (30 கிலோ பெட்டி) - 50, முருங்கைக்காய் கிலோ - 5, வெண்டைக்காய் - 30, முள்ளங்கி -- 8, பாகற்காய் - 15, புடலை - 3, பீர்க்கங்காய் - 20 மற்றும் வெள்ளரிக்காய் - 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதே போன்று, கத்தரிக்காய் - 3, அரசாணிக்காய் - 5, பச்சை மிளகாய் - 25 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் அனைத்து காய்களும் வரத்து குறைவாக இருந்தது. பீட்ரூட் வரத்து இல்லை. மேலும், காய்கறிகள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும்,' என, எதிர்பார்க்கப்படுகிறது.
