ADDED : ஜூன் 16, 2026 07:21 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விஜய் தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மனித, வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்டுப் பன்றிகளை அழிக்க ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகளை, செயல்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
