தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 


UPDATED : ஜூன் 16, 2026 07:44 PM

ADDED : ஜூன் 16, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 07:44 PM ADDED : ஜூன் 16, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறையில் வேலை தேடுபவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 19ம் தேதி நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சுயவிவரம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் பங்கேற்கவும். வயது வரம்பு கிடையாது; அனுமதியும் இலவசம்.

முன்னணி தனியார் நிறுவனங்கள் பல இதில் பங்கேற்று, பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வை நடத்தவுள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும். இதில் தேர்வாகும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.

முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 80563 58107.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us