ADDED : ஜூன் 16, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே காட்டெருமை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
சின்னதடாகம் அருகே உள்ள வீரபாண்டி வெங்கடேஸ்வரா நகரில் விறகு வெட்டும் தொழிலாளி கிருஷ்ணசாமி,65, கடந்த, 2ம் தேதி இவர் வீரபாண்டி, மாங்கரை ரோட்டில் தீப்கரத் தோட்டம் அருகே விறகு வெட்டிக் கொண்டிருந்தபோது, காட்டெருமை தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
