/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயி பலி; உதவித்தொகை வழங்க கோரிக்கை
/
விவசாயி பலி; உதவித்தொகை வழங்க கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 11:22 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே : ள்ள செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன், 67; விவசாயி. இவர் கடந்த, 20ம் தேதி தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பாம்பு கடித்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் இழந்தார்.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால், தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், பாம்பு கடித்து உயிரிழப்பவர்கள் மற்றும் விவசாயிகள் உணவு உற்பத்தி செய்யும் போது, இடி, மின்னல், மற்றும் மின்சாரம் தாக்கி இறப்பவர்கள், தென்னை, பனைமரம் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.