/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2024 05:54 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் பாபு தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முருகானந்த கிருஷ்ணன், கோவை மாவட்ட மகளிரணி தலைவர் சுதாமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கருணாம்பிகை மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும். மரபணு மாற்று விதையை தடை செய்ய வேண்டும். விவசாயிகளின் வேளாண் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.