/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய்க்கான செஸ் வரியை ரத்து செய்யுங்க! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
/
தேங்காய்க்கான செஸ் வரியை ரத்து செய்யுங்க! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
தேங்காய்க்கான செஸ் வரியை ரத்து செய்யுங்க! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
தேங்காய்க்கான செஸ் வரியை ரத்து செய்யுங்க! அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2025 10:38 PM

பொள்ளாச்சி; 'தேங்காய்க்கு விதிக்கப்படும் ஒரு சதவீதம் செஸ் வரியை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்,' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இங்கு, உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தென்னையில் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல் என புதிய, புதிதாக நோய்கள் தாக்கி, தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, விலை உயர்ந்தாலும், விவசாயிகள் முழு பலன் பெற முடியாத நிலை உள்ளது.
தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கிய சூழலில், நோய் தாக்குதல் காரணமாக, 60 சதவீதம் மட்டுமே உற்பத்தியே இருக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, தேங்காய்க்கு விதிக்கும் ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னை விவசாயி தங்கவேலு கூறியதாவது:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளை ஈ, வேர் வாடல் நோய்களால், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேர் வாடலால் பாதிக்கப்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. வெள்ளை ஈ தாக்குதலால், தேங்காய் எடை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வினியோகம், கொப்பரை உற்பத்திக்கு ஊக்கத்தொகை என எவ்வித கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு வேளாண் வணிகத்துறை வாயிலாக சேவை கட்டணமாக தேங்காய்க்கு ஒரு சதவீத செஸ் வரி வசூல் செய்வது மேலும், சுமையை அதிகரித்துள்ளது.
உற்பத்தி குறைந்து துயரத்தில் உள்ள விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையில், அரசு ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.