/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசிப்பட்ட சாகுபடி மழை காத்திருக்கும் விவசாயிகள்
/
மாசிப்பட்ட சாகுபடி மழை காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : மார் 04, 2025 11:32 PM
- நமது நிருபர் -
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சாகுபடி பணிகளை துவக்க முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. மழை இன்றி வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது.
கிணறு, ஆழ் குழாய் கிணறுகளில் நீர் வற்றி வருகிறது. தை மாதத்தில் அறுவடை முடிந்த பின் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. மாசி பட்டம் துவங்கி இரண்டு வாரம் ஆகிறது.
கடும் வெப்பம் நிலவும் மாசி பட்டத்தில் எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துப் பயிர்கள், கம்பு, சோளம் திணை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் நன்கு வளரும். இவை எவ்வளவு வறட்சி ஏற்பட்டாலும் அதை சமாளித்து வளர்ந்து மகசூல் தரக்கூடியவை. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடி பணிகளை துவக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாசியில் மரம் தழைக்க மழை பெய்யும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. மழை பெய்தால் சாகுபடி பணிகளை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.