/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா
/
புனித ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா
ADDED : ஆக 16, 2024 08:38 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே, புனித ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே, வேடர் காலனி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. அன்னையின் தேர்த்திருவிழா கொடி ஏற்றம், கடந்த 8ம் தேதி பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமையில், காரமடை கிறிஸ்து அரசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி பாதிரியார் லூர்துசாமி, திருப்பலியை நிறைவேற்றி மறையுரை ஆற்றி, கொடியேற்றி வைத்தார். சேலம் மறைமாவட்ட பாதிரியார் கிருபாகரன், மூன்று நாள் சிறப்பு நவநாள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினார்.
நேற்று முன்தினம் மாலை, தேர் திருவிழா கூட்டு பாடல் திருப்பலி, குனியமுத்தூர் பங்கு பாதிரியார் அலெக்ஸ் தலைமையில் நடந்தது. இதையடுத்து, அன்னையின் தேர் பவனி முகாமை சுற்றி எடுத்து வரப்பட்டது.
இறுதியில், நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இன்று, கொடியிறக்கம் நடைபெற உள்ளது. தேர் திருவிழா ஏற்பாடுகளை, பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் மற்றும் இலங்கை முகாம் மக்கள் செய்திருந்தனர்.