தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீவன மேலாண்மையால் பால் உற்பத்தி பெருகும்

தீவன மேலாண்மையால் பால் உற்பத்தி பெருகும்

தீவன மேலாண்மையால் பால் உற்பத்தி பெருகும்


ADDED : மே 11, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: தீவன மேலாண்மையை கடைப் பிடித்தால், பால் உற்பத்தி பெருகும், என, கால்நடைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:

மாடுகள் வளர்ப்பு குறித்து விவசாயிகள், கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோர் விரிவான விபரங்களை அறிந்திருக்க வேண்டும். பசுந்தீவனம், உலர் தீவனம், சத்து மிகுந்த தானியங்கள் குறித்தும், கன்று ஈனுவதற்கு முன், கன்று ஈன்ற பிறகு கொடுக்க வேண்டிய தீவனங்கள் எவை என தெரிந்து கொள்ள வேண்டும்.

தீவன மேலாண்மையே பால் உற்பத்தியை அதிகரிக்கும். சுத்தமான காற்றோட்டம் மிகுந்த இடத்தில் கொட்டகை அமைக்க வேண்டும். அந்த கொட்டகையை தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கறவை மாடுகள் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். நோய் தடுப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில்நுட்பங்களை முறையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். தடுப்பூசிகள் மூலம் நோய் வராமல் தடுத்தல் உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. அதை பயன்படுத்தி கொள்ள முன் வரவேண்டும். எந்த சந்தேகம் என்றாலும் அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடி பயன் பெறலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us