/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரிசர்வ் சைட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைப்பு படம்: அருண்
/
ரிசர்வ் சைட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைப்பு படம்: அருண்
ரிசர்வ் சைட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைப்பு படம்: அருண்
ரிசர்வ் சைட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைப்பு படம்: அருண்
ADDED : ஜூலை 05, 2024 02:40 AM
போத்தனூர்;போத்தனூர் அருகே அம்மன் நகர் ரிசர்வ் சைட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதைக்கு மாநகராட்சி சார்பில் வேலி போடப்பட்டது.
போத்தனூர் அருகே மாநகராட்சியின், 85 வது வார்டுக்குட்பட்டது, அம்மன் நகர். இதன் பிரதான சாலையின் இறுதியில் ராஜவாய்க்காலை ஒட்டி, 30 சென்ட் ரிசர்வ் சைட் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜவாய்க்காலை அடுத்து வெள்ளலூர் பேரூராட்சியின் ஒன்றாவது வார்டில், ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் வீட்டு மனை பிரித்தனர். இதற்கான பிரதான சாலையாக, அம்மன் நகர் சாலையை காட்டி, இடங்களை விற்பனை செய்தனர்.
இதற்காக வாய்க்காவின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதியினர் சார்பில், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. புரமோட்டரகளும் வழக்கு. போட்டனர்,
அப்பகுதியினருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. ரிசர்வ் சைட்டில் கம்பி வேலை அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. புரமோட்டர்கள் பிரச்னை செய்ததால், வழி மட்டும் அப்படியே விடப்பட்டது.
மீண்டும் புரமோட்டர்கள் கோர்ட்டை அணுகினர். இத்தகைய வழக்குகளை இங்கு போடக்கூடாது என கோர்ட், அதனை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு ரிசர்வ் சைட்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தியாகராஜன், மாநகராட்சி நிர்வாகத்திற்கு, கம்பி வேலி போட கோரிக்கை விடுத்தார்,
மாநகராட்சி கமிஷனரில் அறிவுறுத்தலில், வக்கீலிடம் கருத்து பெறப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில், உதவி இன்ஜி., சரண்யா, பாதையை கம்பிவேலி போட்டு அடைக்கும் பணியை மேற்கொண்டார்.
அங்கு வந்த புரமோட்டர்கள் வழக்கின் தீர்ப்பு நகல் கேட்டு வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் இரு புல்டோசர்கள் கொண்டு இடத்தை சுத்தம் செய்தபோது, புரமோட்டர்களில் ஒருவர் தடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், அவரை அப்புறப்படுத்தினார். இதையடுத்து கல் நடப்பட்டு, வேலி அமைக்கப்பட்டது.
மேலும், இவ்விடம் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒதுக்கீட்டு இடமாகும். அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதனையொட்டி, 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியினர் கூறுகையில், ' 25 ஆண்டுகட்கும் மேலான பிரச்னைக்கு தற்போது நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, 30 சென்டில் சுமார், 15 சென்ட் இடம்தான் மீட்கப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள இடத்தையும் மீட்கவேண்டும். அதுபோல், பூங்கா அமைக்கவும் மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.