/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் ஆர்.பி., குரூப்ஸ் வெற்றி
/
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் ஆர்.பி., குரூப்ஸ் வெற்றி
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் ஆர்.பி., குரூப்ஸ் வெற்றி
ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் ஆர்.பி., குரூப்ஸ் வெற்றி
ADDED : மே 01, 2024 12:56 AM

கோவை:மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஜெய்சன் ஜெபராஜ் ஐந்து விக்கெட்கள் கைப்பற்ற, ஆர்.பி., குரூப்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட் கோப்பை'க்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில் ஆர்.பி., குரூப்ஸ் மற்றும் சி.ஐ.டி., கல்லுாரி அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சி.ஐ.டி., அணியினரை, ஆர்.பி., குரூப்ஸ் பந்து வீச்சாளர் ஜெய்சன் ஜெபராஜ் தனது திறமையான பந்து வீச்சால் மிரட்டினார்.
ஜெய்சன் ஐந்து விக்கெட்கள் வீழ்த்த, மறுபக்கம் சுரேந்தர் குமார் தனது பங்கிற்கு மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதனால், சி.ஐ.டி., கல்லுாரி அணி 33.3 ஓவர்களில், 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சி.ஐ.டி., அணிக்காக அனிருத் 42 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய ஆர்.பி., குரூப்ஸ் அணிக்கு, பிரவீந்திரனின் (68) அரை சதம் கைகொடுக்க, 31.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 128 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தனர்.