/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கமர்சியல் கோர்ட்களில் இ - பைலிங்கில் வழக்கு தாக்கல்
/
கோவை கமர்சியல் கோர்ட்களில் இ - பைலிங்கில் வழக்கு தாக்கல்
கோவை கமர்சியல் கோர்ட்களில் இ - பைலிங்கில் வழக்கு தாக்கல்
கோவை கமர்சியல் கோர்ட்களில் இ - பைலிங்கில் வழக்கு தாக்கல்
ADDED : ஏப் 29, 2024 12:49 AM
கோவை;கோவையில் செயல்படும் இரண்டு கமர்சியல் கோர்ட்களில், முற்றிலும் இ- பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்யும் முறை துவங்கியுள்ளது.
கோவை, காந்திபுரத்தில் வணிக வழக்குகளை விசாரிக்க( கமர்சியல் கோர்ட்) மாவட்ட நீதிபதி மற்றும் சார்புநீதிபதி நிலையில், இரண்டு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இக்கோர்ட்டில் நேரடியாவும், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல, சமரச மையம் வாயிலாக தீர்க்கப்படாத வழக்கிலும், விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்குகள் இ- பைலிங் முறையில் தாக்கல் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வந்தாலும், பழைய மற்றும் மாற்றம் செய்யப்பட்ட வழக்குகள் மீது, நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது, அனைத்து நிலுவை வழக்குகளிலும், ஸ்கேனிங், அப்லோடிங் மற்றும் டிஜிட்டல் பணிகள் முடிக்கப்பட்டு, முற்றிலும் இ- பைலிங் வாயிலாக வழக்கு தாக்கல் செய்யப்படும் நடைமுறை, கடந்த 26ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக, கோவை கமர்சியல் கோர்ட்டில், இ- பைலிங் முறை துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

