/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி கல்வியறிவு வாரம் ரூ.1.87 கோடி கடன் வழங்கல்
/
நிதி கல்வியறிவு வாரம் ரூ.1.87 கோடி கடன் வழங்கல்
ADDED : மார் 03, 2025 03:54 AM

கோவை : நிதி கல்வியறிவு வாரத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மகளிர் குழுக்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு சேமிப்பு, முதலீடு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
நிதி கல்வியறிவை ஊக்குவிக்க, ரிசர்வ் வங்கி 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், நிதி கல்வியறிவு வாரத்தை நடத்தி வருகிறது. நடப்பாண்டு, 'பெண்களுக்கான செழிப்பான முன்னேற்றம்' என்ற கரும்பொருளை மையமாக கொண்டு, கல்வியறிவு வாரம், வங்கிகளில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக நிதி பெறும் மகளிர் குழுக்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, சேமிப்பு, முதலீடு உட்பட முன்னேற்ற அம்சங்கள் குறித்து, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராம கிருஷ்ணன், 'நபார்டு' வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலா ராவ் ஆகியோர் விளக்கமளித்தனர். 17 மகளிர் குழுக்களுக்கு, ரூ.1.87 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டது.