sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒழுங்கு முறை கூடத்தில் பொருளீட்டு கடன்

/

ஒழுங்கு முறை கூடத்தில் பொருளீட்டு கடன்

ஒழுங்கு முறை கூடத்தில் பொருளீட்டு கடன்

ஒழுங்கு முறை கூடத்தில் பொருளீட்டு கடன்


ADDED : செப் 07, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 07, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்;செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.

சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் கூறியதாவது:

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, கொண்டை கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 லட்சம் ரூபாய் அல்லது இருப்பு வைக்கப்படும் பொருட்களின் மதிப்பில், 50 சதவீதம் கடனாக வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு, 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

ஒரு பயனாளி, 120 நாட்கள் வரை, தங்களின் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக, 180 நாட்கள் வரை அனுமதிக்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை அணுகலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us