/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்ட் அருகே பற்றி எரியும் தீ; குப்பை எரிப்பதால் பயணியர் அச்சம்

ADDED : மார் 04, 2025 11:24 PM

பெ.நா.பாளையம்; பெரியமத்தம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே குப்பைகளை எரிப்பதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
பெரியமத்தம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் பயணியர் ஏராளமானோர் தினமும் பஸ்சுக்காக காத்திருப்பர்.
இப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட், சிறு கடைகள் உள்ளன. இப்பகுதியில் மயானம் அருகே பிளிச்சி ஊராட்சி சார்பில் தினசரி சேகரிக்கப்படும் ஐந்து டன் எடையுள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கொண்டு வந்து, எரிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'குப்பைகளுடன் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து கொளுத்தப்படுவதால், இப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பிளிச்சி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், டிராக்டர்களில் குப்பைகளை கொண்டு வந்து போட்டு செல்கின்றனர். அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன், ஊராட்சி நிர்வாகம் மயானத்தில் குப்பை கொட்டுவதை கைவிட வேண்டும்' என்றனர்.