/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரக்கடையில் தீவிபத்து; பொருட்கள் நாசம்
/
மரக்கடையில் தீவிபத்து; பொருட்கள் நாசம்
ADDED : பிப் 27, 2025 09:15 PM
கோவை; கவுண்டம்பாளையம் பகுதியில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 28.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.
ரத்தினபுரி, கண்ணப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன், 46. இவர் கவுண்டம்பாளையம், சங்கனுார் மெயின் ரோட்டில் மர பொருட்கள் செய்யும் கடை வைத்துள்ளார். இவரின் கடை அருகில் வாகனங்களுக்கு புகை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒன்று இருந்தது.
கடந்த, 25ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சங்கரேஸ்வரன் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், அதிகாலை 4:30 மணியளவில் சங்கரேஸ்வரன் கடை அருகில் கடை வைத்திருக்கும் நபர், சங்கரேஸ்வரனை அழைத்து கடை தீப்பற்றி எரிவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர் அங்கு சென்று பார்த்த போது, அவரின் மரக்கடை மற்றும் அருகில் இருந்த வாகன புகை பரிசோதனை நிலையத்தில் தீபற்றி எரிந்தது.
இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் மரக்கடையில் இருந்து பொருட்கள், அருகில் இருந்த கடையில் இருந்த பொருட்கள், வாகனங்கள் என ரூ. 28.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயின் கருகி நாசமாகின.
சம்பவம் குறித்து சங்கேரஸ்வரன் அளித்த புகாரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

