முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக்: இ.ஏ.பி., அணி வெற்றி
முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக்: இ.ஏ.பி., அணி வெற்றி
ADDED : ஏப் 29, 2024 01:55 AM

கோவை;மாவட்ட கிரிக்கெட் சங்கம், 'லட்சுமி கார்டு குளோத்திங் கோப்பைக்கான' முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி மற்றும் ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இ.ஏ.பி., அணிக்கு ஆசிக் (122) சதம் அடிக்க, 50 ஓவர்களில் 233 ரன்கள் சேர்த்தது. ஆர்.கே.எஸ்., அணியின் சாய் கிருஷ்ணா நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய ஆர்.கே.எஸ்., அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணிக்காக சந்தோஷ் (37), பிரணேஷ் (39) ஆகியோர் பொறுப்பாக விளையாடினர். இ.ஏ.பி., அணியின் தினேஷ், மது ஆகியோர் தலா நான்கு விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதேபோல், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த ஐந்தாம் டிவிஷன் லீக் போட்டியில் அப்பாசாமி அணி, 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அப்பாசாமி அணி பிரபு (54), வடிவேல் (57) ஆகியோரின் உதவியால் 47.4 ஓவர்களில் 253 ரன்கள் சேர்த்தது. பெனாடிக் போர்ஸ் அணியின் சத்யமூர்த்தி, நான்கு விக்கெட் மற்றும் சஞ்சய் குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினர். வெற்றிக்கு, 254 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெனாடிக் போர்ஸ் அணியினர் ஆரம்பம் முதலே தடுமாறினர்.
அடுத்தடுத்து வீரர்கள் வெளியேற அந்த அணி, 27.4 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்பாசாமி அணியின் சூர்யா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
