/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல் டிவிஷன் கிரிக்கெட் ஆர்.கே.எஸ்., அசத்தல்
/
முதல் டிவிஷன் கிரிக்கெட் ஆர்.கே.எஸ்., அசத்தல்
ADDED : ஆக 27, 2024 10:22 PM
கோவை:மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் ஆர்.கே.எஸ்., அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின்,'லட்சுமி கார்டு குளோத்தில் கோப்பைக்கான' முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் சூர்யபாலா கிரிக்கெட் அகாடமி மற்றும் ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஆர்.கே.எஸ்., அணி ஜெரிஸ் (41), பாலதரண் (43) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய சூர்யபாலா அணியை ஆர்.கே.எஸ்., அணியின் பாலதரண், கார்த்திகேயன், சாய்கிருஷ்ணா ஆகியோர் தங்களின் பந்து வீச்சால் கட்டுப்படுத்தினர். மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றிய நிலையில், சூர்யபாலா அணி 32.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவட்டானது. சூர்யபாலா அணிக்கு சிகாப்தீன் (31) ஆறுதல் அளித்தார்.

