ADDED : ஆக 14, 2024 12:12 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன வளாகத்தில், இளங்கலை வேளாண் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
கல்லுாரி இயக்குனர் கெம்புசெட்டி தலைமை வகித்தார். முதல்வர் பிரபாகர் முன்னிலை வகித்தார். முன்னதாக, துணை முதல்வர் சிவசாமி, அனைவரையும் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பூர்ணிமாஜென்சி, கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.
இதேபோல, பல்கலை கழக தேர்வு முறை குறித்தும், வேளாண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். முடிவில், உதவி ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.
