ADDED : செப் 07, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரியில், பி.இ., மற்றும் பி.டெக்., முதலாமாண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரிச் செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். தாளாளர்கள் ஷிவானிகிருத்திகா, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலாமாண்டு துறைத் தலைவர் மோகன்ராம் வரவேற்றார். முன்னாள் தலைமை வனப்பாதுகாவலர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து, கல்வி மற்றும் புத்தகம் படித்தலின் முக்கியத்துவம் குறித்து, முதலாமாண்டு மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கல்லுாரி அறங்காவலர்கள் சிவஞானம், சிவமணி, முதல்வர் தனமுருகன், முதன்மையர் முத்துசாமி, துறைத்தலைவர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.