/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மீன், முட்டை அமிலம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான அங்கக ஊக்கிகள்

ADDED : செப் 07, 2024 02:45 AM
பெ.நா.பாளையம்;அங்கக வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதில், மீன் மற்றும் முட்டை அமிலத்தின் பங்குகள் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
அங்கக வேளாண்மையில், பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மீன் மற்றும் முட்டை அமிலம் கரைசல்கள் பயிர்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து, வளர்ச்சி ஊக்கிகளை அளித்து, பயிர்கள் அதிக உற்பத்தி திறன் மற்றும் விளைச்சல் பெற உதவுகிறது.
இவை பயிர் வளர்ச்சி ஊக்கியாக மட்டும் இல்லாமல், வறட்சி காலங்களில் பயிர்கள் மீது தெளிக்கும்போது, வறட்சியை தாங்கி வளரும் தன்மையை அளித்து, விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது.
இந்த கரைசலை தயாரித்த தேதியிலிருந்து ஆறு மாதங்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மீன் அமிலம் தயாரிக்க மீன் கழிவுகளை பயன்படுத்தலாம்.
இறைச்சிக்கு பயன்படுத்தியது போக, மீதமுள்ள மீன் கழிவுகளை, மீன் அமிலம் தயாரிக்க பயன்படுத்தலாம்.
மீன் தலை, குடல் மற்றும் வால் பாகங்களை எடுத்துக் கொள்ளலாம். மீன் கழிவுகளை சேகரிக்கும் போது, அதனுடன் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்பாராத விதமாக தண்ணீர் இருந்தால், அதை வடித்து விட வேண்டும். இந்த கரைசலை தயாரிப்பதற்கு சம அளவு மீன் கழிவுகள் மற்றும் கரும்பு சர்க்கரையை எடுத்துக் கொண்டு நொதிக்க வைத்து, மீன் அமிலம் தயாரிக்கலாம்.
முட்டை அமிலம் தயாரிக்க கோழி முட்டையை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இந்த இரண்டு பயிர் ஊக்கிகளையும் இலை வழியாகவும், சொட்டு நீர் பாசனம் வாயிலாகவும் அளிக்கலாம் என, வேளாண்துறையினர் கூறினர்.