/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐவர் கால்பந்து போட்டி :சூர்யா அணி அபாரம்
/
ஐவர் கால்பந்து போட்டி :சூர்யா அணி அபாரம்
ADDED : மே 21, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:ராஜேஷ் நினைவுக் கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி, பொள்ளாச்சி, எஸ்.எஸ்.எஸ்., அரீனா மைதானத்தில் நடந்தது. போட்டியில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த, 32 அணிகள் பங்கேற்றன.
அவ்வகையில், இறுதிபோட்டியில், சூர்யா கால்பந்து அணி, ஸ்ட்ரீட் பைட்டர்ஸ் அணியுடன் மோதலை எதிர்கொண்டது. இதில், துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யா அணி, 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதன் வாயிலாக, ஸ்ட்ரீட் பைட்டர்ஸ் அணி இரண்டாமிடம் பிடித்தது. இதேபோல, எஸ்.எஸ்.எஸ்., பிரதர்ஸ் அணி மூன்றாமிடத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

