/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் வேடமிட்டு பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது
/
பெண் வேடமிட்டு பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது
பெண் வேடமிட்டு பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது
பெண் வேடமிட்டு பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது
ADDED : மே 28, 2024 01:09 AM
போத்தனூர்;லாரி டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி, 30 ஆயிரம் ரூபாய் பறித்து தப்பிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
க.க.சாவடி அடுத்து நவக்கரை நந்தி கோவில் அருகே பாலம் ஒன்று உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன், மேட்டுப்பாளையம், தந்தை பெரியார் வீதியை சேர்ந்த பிரபு, 38 ஓட்டி வந்த லாரியை அவ்விடத்தில் ஒருவர், டார்ச் லைட் அடித்து நிறுத்தச் செய்தார். பிரபு லாரியை நிறுத்தி கீழே இறங்கிச் சென்றார்.
மூன்று பேர் கும்பல், பிரபுவை அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றது. கத்தியை காட்டி மிரட்டி, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்து தப்பியது. க.க.சாவடி போலீசில் பிரபு புகார் செய்தார்.
விசாரணை நடத்திய போலீசார், பெண்கள் போல வேடமிட்டு, பணம் பறிக்கும் பொள்ளாச்சி, அரசூரை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சபரீஷ், 25, பாலக்காடு, ஆட்டயாம்பதியை சேர்ந்த டிரைவர் சிவா, 25, கிணத்துக்கடவு குளத்துபாளையத்தை சேர்ந்த குருபிரகாஷ், 21, உடுமலை, தேவனூர்புதூரை சேர்ந்த நவீன், 26 மற்றும் சூர்யா, 18 ஆகியோரை கைது செய்தனர்.