/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தாபுதுார் ஐயப்பசுவாமி கோவிலில் இன்று மாலை கொடியேற்று விழா
/
சித்தாபுதுார் ஐயப்பசுவாமி கோவிலில் இன்று மாலை கொடியேற்று விழா
சித்தாபுதுார் ஐயப்பசுவாமி கோவிலில் இன்று மாலை கொடியேற்று விழா
சித்தாபுதுார் ஐயப்பசுவாமி கோவிலில் இன்று மாலை கொடியேற்று விழா
ADDED : ஏப் 04, 2024 11:35 PM
கோவை:சித்தாபுதுார் ஐயப்ப சுவாமி பொற்கோவில், 55 வது ஆண்டு விழாவை ஒட்டி இன்று மாலை கொடியேற்றம் செய்யப்படுகிறது.
சித்தாபுதுார் ஐயப்ப சுவாமி பொற்கோவில் ஆண்டு விழாவை ஒட்டி இன்று மாலை 6:00 மணிக்கு, ஆலயசுத்தி நிகழ்ச்சியை தொடர்ந்து,மாலை 7:00 மணிக்கு திருக்கொடியேற்றம் நடக்கிறது. சுவாமி தீபாராதனையை தொடர்ந்து, மட்டனுார் பஞ்சவாத்ய குழுவினரின் , முத்தாயம்பகை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை காலை கோவில் தாந்திரீக சடங்குகள், விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், மாலை உற்சவ சடங்குகள் நடக்கிறது. மாலை இலங்கை ஜெயராஜின் சிறப்பு வழக்காடு மன்றம் நடக்கிறது.
திருவிழாவின் மூன்றாம் நாளான ஏப்.,7 அன்று ஐயப்ப சேவா சங்கத்தின் 69 வது ஆண்டு விழாவும் கொட்டாரக்கரை ஸ்ரீ பத்ரா வழங்கும் நாட்டிய நாடகம் நடக்கிறது.
ஏப்.,8 அன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், மாலை 7:30 மணிக்கு தபஸ்யாமிருதம் நடனப்பள்ளி மாணவியரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும்.ஏப்.,9 அன்று திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி நடக்கிறது. தாந்திரீக சடங்குகள் மாலை 6:00 மணிக்கு நவக்கிரஹங்களுக்கு சிறப்பு பூஜைகளும், வீரமணிராஜூ குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும். ஏப்.,10 ஆறாம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ விஸ்வமாதங்கி நாட்டிய நாடகம் நடக்கிறது. ஏப்.,11 அன்று மாலை 7:00 மணிக்கு பள்ளி வேட்டையும், இரவு 11:00 மணிக்கு பள்ளிக்குறுப்பும். ஏப்.,12 அன்று எட்டாம் நாள் திருவிழாவில் பள்ளிக்குறுப்பு உணர்த்தல் முளை எடுத்தல் திருக்கணி தரிசனம் உற்சவ சடங்குகள், விஷ்ணுவிற்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு ஐயப்பசுவாமி மூன்று யானைகளோடு பஞ்சவாத்தியம், காவடி நவநாதஸ்வரம், தெய்யம், பூதன்திற, மின் அலங்கார ரதம், சிங்காரி மேளம், சிங்காரி காவடி ஆகியவற்றோடு பக்தர்கள் புடை சூழ நகர்வலம் புறப்பட்டு. சின்னச்சாமிநாயுடு சாலை, சத்திசாலை, கிராஸ்கட் சாலை, 11 வது வீதி100 அடி சாலை நாராயணசாமி நாயுடு சாலை வழியாக கோவில் அருகே உள்ள ஆறாட்டு குளத்தை வந்தடையும்.
இரவு 11:00 மணிக்கு ஆறாட்சி ஜோதி தரிசனம் நடக்கும். திரளான பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

