/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலாற்றில் வெள்ளம்: கோவிலுக்கு செல்ல தடை
/
பாலாற்றில் வெள்ளம்: கோவிலுக்கு செல்ல தடை
ADDED : ஜூலை 27, 2024 12:55 AM

ஆனைமலை;ஆனைமலை அருகே, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், பாலாறு பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாகவும், சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரித்து பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாலாறு ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில் உள்ள தரை மட்ட பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் நலன் கருதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.