/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி
/
வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி
ADDED : ஜூன் 26, 2024 01:55 AM

கோவை;வரத்து அதிகரிப்பால், பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ரூ.400க்கு விற்ற அரளி ரூ.40க்கு விற்பனையானது.
கோவை பூ மார்க்கெட்டிற்கு, சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, உள்ளிட்ட பூக்களும் வருகின்றன. இது தவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக, வரத்து குறைவால் மல்லிகைப்பூ மற்றும் ஜாதி மல்லி விலை உயர்ந்தும், மற்ற பூக்களின் வரத்து அதிகரிப்பால், விலை குறைந்தும் விற்பனையானது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான மல்லிகைப்பூ, கிலோ ரூ.1000க்கு விற்பனையானது.
ரூ.400 முதல் ரூ.500க்கு விற்பனையான ஜாதி மல்லி கிலோ ரூ.800க்கு விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் ரூ.500க்கு விற்பனையான முல்லை பூ ரூ.240க்கும், ரூ.80க்கு விற்ற ஒரு கட்டு ரோஜா ரூ.40க்கும், 200க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஸ் ரூ.100க்கும், ரூ.400க்கு விற்பனையான அரளி கடும் வீழ்ச்சி அடைந்து, ரூ.40க்கும் விற்பனையானது. 200 ரூபாய் செவ்வந்தி பூ ரூ.160க்கும், தாமரை பூ ரூ.3, துளசி கட்டு ரூ.10 என விற்கப்பட்டது.