/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தியாகிகளை கவுரவிக்கும் மலர் வெளியீடு: வாரிசுகளிடம் இருந்து குறிப்பு வரவேற்பு
/
தியாகிகளை கவுரவிக்கும் மலர் வெளியீடு: வாரிசுகளிடம் இருந்து குறிப்பு வரவேற்பு
தியாகிகளை கவுரவிக்கும் மலர் வெளியீடு: வாரிசுகளிடம் இருந்து குறிப்பு வரவேற்பு
தியாகிகளை கவுரவிக்கும் மலர் வெளியீடு: வாரிசுகளிடம் இருந்து குறிப்பு வரவேற்பு
ADDED : ஆக 12, 2024 08:51 PM
கோவை:சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விதமாக மலர் வெளியிடப்படவுள்ள நிலையில் தியாகிகளின் வாரிசுகள் தொடர்புகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் நலச்சங்க தலைவர் கோதனவல்லி அறிக்கை:
நமது நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள் அதிகம் உள்ளனர். இதில், ஒரு சில தியாகிகளை மட்டும் வெளிக்கொணர்ந்து வாழ்த்தி வருகிறோம். மேலும் சில தியாகிகளின் குறிப்புகள் தற்போது கிடைக்கப்பெற்று, அவர்களது வாரிசுகளையும் சேர்த்து ஒரே குடும்பமாக இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
கடந்த, 2020ல் அப்போதைய மாவட்ட கலெக்டர் சமீரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிகழ்ச்சியில், 43 தியாகிகளின் வாரிசுகளை கவுரவித்து பெருமைப்படுத்தினோம். தற்போது கிடைத்துள்ள விபரங்களின்படி, தியாகிகளின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய மலரை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
கோவையில் மேலும் சில தியாகிகளின் வாரிசுகள் வசிக்கும் நிலையில், அவர்களையும் அழைத்து கவுரவிக்க உள்ளோம். விடுபட்டுள்ள தியாகிகளின் வாழ்க்கை குறிப்புகள் மலரில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எனவே, தியாகியின் புகைப்படம், சுதந்திர போராட்ட வீரர் என்பதற்கான ஆதாரம், வாழ்க்கை குறிப்பு ஆகியவற்றை அனுப்பிவைத்தால், மலரில் வெளியிட ஏதுவாக இருக்கும். இதுகுறித்த விபரங்களுக்கு, 99522 55533 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

