sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்

/

பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்

பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்

பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்


ADDED : மார் 22, 2024 08:51 PM

Google News

ADDED : மார் 22, 2024 08:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் முறையாக நடக்க பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், 3 பறக்கும் படைகள் மற்றும், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் உருவாக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பறக்கும் படைக்கும், ஒரு அரசு அலுவலர், ஒரு எஸ்.எஸ்.ஐ., இரு காவலர்கள் மற்றும் ஒரு வீடியோகிராபர் என, ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், 24 மணி நேரமும், 8 மணி நேர சுற்று முறையில் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், 'தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், பணபட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றோம்.

தேர்தல் விதிமுறைகள், பணப்பட்டுவாடா, கட்சியினரிடையே மோதல் உள்ளிட்டவைகளையும் தீவிரமாக கண்காணிப்போம். உரிய ஆவணங்கள் இல்லாமல், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட ரொக்கம் கொண்டு செல்லும் நபர்களிடமிருந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us