/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு: கடந்த முறை குறைந்த பகுதிகளில் கவனம்
/
ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு: கடந்த முறை குறைந்த பகுதிகளில் கவனம்
ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு: கடந்த முறை குறைந்த பகுதிகளில் கவனம்
ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு: கடந்த முறை குறைந்த பகுதிகளில் கவனம்
ADDED : ஏப் 16, 2024 11:23 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தொகுதியில், கடந்த முறை, 153 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது. அப்பகுதியில், இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, விழிப்புணர்வு பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக, மக்களிடம் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதில், கடந்த தேர்தலில் குறைந்த ஓட்டு சதவீதம் பதிவான பகுதிகளை கண்டறிந்து, அங்கு அதிகாரிகள் விழிப்புணர்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தொண்டாமுத்துாரில், 55 ஓட்டுச்சாவடிகள்; கிணத்துக்கடவு, 39; பொள்ளாச்சி, 15; வால்பாறையில் ஒன்பது; உடுமலையில் 30; மடத்துக்குளம், 5 என மொத்தம், 153 ஓட்டுச்சாவடிகளில், 60 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. மேலும், 30 ஓட்டுச்சாவடிகளில், 65 சதவீதத்துக்கும் குறைவான அளவில் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், நடைபெற உள்ள தேர்தலில், 100 சதவீத இலக்கை அடைய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கோவை, பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளுக்கான பொது பார்வையாளர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 60 சதவீதத்துக்கு குறைவான அளவில் ஓட்டுக்கள் பதிவான ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில், வாக்காளர்கள் இடையே ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
வாக்காளர்கள், தவறாமல் ஓட்டு அளித்து, 100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

