/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து லீக் ஜக்கோபி அணி வெற்றி
/
கால்பந்து லீக் ஜக்கோபி அணி வெற்றி
ADDED : மார் 25, 2024 01:08 AM
கோவை:மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் லீக் போட்டியில், 2 கோல் வித்தியாசத்தில் ஜக்கோபி அணி வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் 'பி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, அவிநாசி சாலை சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
எம்.ஆர்.எப்.சி., மற்றும் ஜக்கோபி எப்.சி., அணிகள் மோதிய போட்டியில், ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே, சூர்யமூர்த்தி ஒரு கோல் அடிக்க, ஜக்கோபி அணி தன் கணக்கை துவங்கியது. தொடர்ந்து 38வது நிமிடத்தில், எம்.ஆர்.எப்.சி.,யின் சுரேஷ் பாண்டியன் ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், ஜக்கோபி அணிக்காக விஜய் (65வது நிமிடம்), கவுதம் (71வது நிமிடம்) தலா ஒரு கோல் அடிக்க, ஜக்கோபி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

