/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து லீக் போட்டி கே.ஆர்.வி., வெற்றி
/
கால்பந்து லீக் போட்டி கே.ஆர்.வி., வெற்றி
UPDATED : மார் 22, 2024 12:00 PM
ADDED : மார் 22, 2024 12:00 AM

கோவை;மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், கே.ஆர்.வி., நினைவு அணி வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், கால்பந்து லீக் போட்டிகள் மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன. இதன், 'பி' டிவிஷன் கால்பந்து போட்டி, அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் மாலை நடந்த லீக் போட்டியில், கே.ஆர்.வி., நினைவு கால்பந்து கிளப் மற்றும் போத்தனுார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி கள் மோதின.
கடந்த போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கிய கே.ஆர்.வி., அணியின், மாணிக்கராஜ் (54வது நிமிடம்), வேல் துரை (59வது) அடுத்தடுத்து கோல் அடிக்க, கே.ஆர்.வி., அணி ஆட்ட நேர முடிவில் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

