/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை உழவுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் உண்டு
/
கோடை உழவுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் உண்டு
ADDED : மே 10, 2024 10:30 PM
சூலூர்:சுல்தான்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் கண்ணா மணி அறிக்கை:
கோடை மழை துவங்க உள்ளதால், அதற்கு முன் கோடை உழவு செய்து, மண்ணில் உள்ள புழுக்களின் முட்டைகளை அழிக்கலாம். இதன் மூலம், அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யமுடியும். சுல்தான்பேட்டை வட்டாரத்தில் கோடை உழவு செய்ய, 100 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒரு எக்டருக்கு, 2 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
கோடை உழவுக்கான மானியம் பெற, உழவு செய்யப்பட்ட நிலத்தின் படம், ஆதார் நகல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்க ஆயத்த பணிகளை வேளாண் அதிகாரிகள் குருசாமி, ரமேஷ் ஆகியோர் செய்துள்ளனர். மேலும், கோடை உழவு பணி மேற்கொண்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், நுண்ணூட்ட உரம் ஆகியன வழங்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.