/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் வளர்ச்சிக்கு பா.ஜ., வெற்றி முக்கியம்; அண்ணாமலை பேச்சு
/
கோவையின் வளர்ச்சிக்கு பா.ஜ., வெற்றி முக்கியம்; அண்ணாமலை பேச்சு
கோவையின் வளர்ச்சிக்கு பா.ஜ., வெற்றி முக்கியம்; அண்ணாமலை பேச்சு
கோவையின் வளர்ச்சிக்கு பா.ஜ., வெற்றி முக்கியம்; அண்ணாமலை பேச்சு
ADDED : மார் 29, 2024 12:31 AM

சூலூர்:கோவையின் வளர்ச்சிக்கு பா.ஜ., வெற்றி பெறுவது முக்கியம், என, தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை பேசினார்.
பா.ஜ., தலைவரும், கோவை லோக்சபா வேட்பாளருமான அண்ணாமலை, சுல்தான்பேட்டை, சூலூர் பகுதியில் முக்கிய பிரமுகர்கள், ஹிந்து இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார்.
அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில்,தொழில் நகரமான கோவையின் வளர்ச்சிக்கு பா.ஜ., வெற்றி பெறுவது முக்கியம். தொகுதிக்கு என்ன கட்டமைப்புகள் தேவை, தொழில் துறைக்கு என்ன வசதிகள் வேண்டும் என, கேட்டறிந்து செய்து தர பா.ஜ., அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். நேரடியாக பிரதமர் மோடியுடன் பேசி, அனைத்து வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதே முதல் பணியாக இருக்கும். பா.ஜ., வெற்றிக்கு உங்கள் ஆதரவும், உழைப்பும் தேவை, என்றார். சுற்றுப்பயணத்தில், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.