/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்குள் சிறுத்தை புகுந்ததாக மக்கள் அச்சம் மர நாய் என வனத்துறை தகவல்

ADDED : ஜூலை 17, 2024 12:11 AM
அன்னுார்:அன்னுார் அருகே ஊருக்குள் சிறுத்தை புகுந்ததாக மின் வாரிய ஊழியர் தெரிவித்தார். எனினும் அது மர நாய் என வனத்துறை தெரிவித்தது.
பொன்னே கவுண்டன் புதுாரில், தர்மலிங்கம் என்பவரது தோட்டத்தில் பராமரிப்பு பணிக்காக மின் ஊழியர் நேற்று மின் கம்பத்தில் ஏறி உள்ளார். அப்போது அங்கே சிறுத்தை ஒன்று மயிலை கடித்து குதறியதாக மின் ஊழியர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை ரேஞ்சர் சரவணன் தலைமையில் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வந்து கால்தடத்தை ஆய்வு செய்தனர்.
ரேஞ்சர் சரவணன் கூறுகையில், ''சிறுத்தையின் கால் தடம் 10 சென்டிமீட்டர் வரை இருக்கும். இங்கு பதிந்துள்ள கால் தடம் மிகவும் சிறியதாக உள்ளது. சிறுத்தையாக இருக்க வாய்ப்பில்லை. மர நாயாக தான் இருக்கும். எனினும் பொதுமக்கள் தெரிவித்ததற்காக இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளோம். வனவர்கள் இந்த பகுதியில் ஒரு நாள் கண்காணிப்பில் ஈடுபடுவர்,'' என்றார்.