/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரியில் கட்சிக்கொடி வனத்துறையினர் 'கிடுக்கிப்பிடி'
/
வெள்ளியங்கிரியில் கட்சிக்கொடி வனத்துறையினர் 'கிடுக்கிப்பிடி'
வெள்ளியங்கிரியில் கட்சிக்கொடி வனத்துறையினர் 'கிடுக்கிப்பிடி'
வெள்ளியங்கிரியில் கட்சிக்கொடி வனத்துறையினர் 'கிடுக்கிப்பிடி'
ADDED : பிப் 24, 2025 11:21 PM

கோவை, ;கோவை, வெள்ளியங்கிரி 7வது மலையில், த.வெ.க., கட்சிக் கொடியை நட்டிச் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரிக்கு பாதயாத்திரை செல்ல, பக்தர்களுக்கு இம்மாதம் தொடக்கம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளியங்கிரியின் 7வது மலை உச்சியில், பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் இருந்து சற்று விலகி, உயரமான மூங்கில் கம்பு நட்டு, அதில் த.வெ.க., கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இந்த மலையை அடைய, சுமார் 3 மணி நேரம் ஆகும். ஆன்மிகத் தலத்தில், அதுவும் வனத்துறையினரின் கட்டுப்பாடு அதிகம் உள்ள மலைப்பகுதியில், கட்சிக் கொடி பறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்தரநாத், வன அலுவலர்களை அனுப்பி, கட்சிக் கொடியை அகற்றினார்.
மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “7வது மலையில் கட்டப்பட்டிருந்த கொடி அகற்றப்பட்டது. இதைச் செய்த விஷமிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

