/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏப்ரல் மாதம் ஒரே நாளில் வரையாடுகள் கணக்கெடுப்பு இரு மாநில வனத்துறையினர் ஆயத்தம்
/
ஏப்ரல் மாதம் ஒரே நாளில் வரையாடுகள் கணக்கெடுப்பு இரு மாநில வனத்துறையினர் ஆயத்தம்
ஏப்ரல் மாதம் ஒரே நாளில் வரையாடுகள் கணக்கெடுப்பு இரு மாநில வனத்துறையினர் ஆயத்தம்
ஏப்ரல் மாதம் ஒரே நாளில் வரையாடுகள் கணக்கெடுப்பு இரு மாநில வனத்துறையினர் ஆயத்தம்
ADDED : மார் 22, 2024 01:17 AM

பொள்ளாச்சி:ஏப்., மாதம், தமிழகம் மற்றும் கேரள மாநில வனத்துறையினர் ஒன்றிணைந்து, ஒரே 'நாளில் வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
உயரமான மலைகளில் குன்றுகள் மற்றும் புல்வெளிகளில் காணப்படும், நீலகிரி வரையாடுகள், 'மலைகளின் பாதுகாவலர்கள்' என்று அழைக்கப்படுகின்றன. மனித இனத்திற்கு உதவிகரமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அதிகப்படுத்துவது, தனித்துவமான சோலை புல்வெளியை பராமரிப்பது போன்ற செயல்களில், இந்த வரையாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வாழ்விடங்கள்
நீலகிரி வரையாடுகள்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும் பகுதியில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. தற்போது இவற்றின் வாழ்விடங்கள் சுருங்கி, தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
அவ்வகையில், ஆண்டுக்கு ஒரு முறை இரு மாநிலங்களிலும் ஒன்று சேர கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கணக்கெடுப்பு, வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படஉள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வனத்தில், வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதை கண்டறியும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. குறைந்திருந்தால், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்.
ஆலோசனை
இந்நிலையில், வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரையாடுகளை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் குறிப்பிட்ட மலைப்பகுதிகள் நீங்கலாக, உலகில் வேறு எங்குமே காணமுடியாது.
அதன்படி, நீலகிரியில் முக்கூர்த்தி, கோவையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் காணப்படுகின்றன. ஏப்., மாதம், தமிழகம் மற்றும் கேரள மாநில வனத்துறையினர் ஒன்றிணைந்து, குறிபிட்ட நாளில் ஒன்று சேர கணக்கெடுப்பு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

