/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டம்பட்டி குளத்தில் அடர்வனம் பராமரிப்பு பணி
/
காட்டம்பட்டி குளத்தில் அடர்வனம் பராமரிப்பு பணி
ADDED : ஜூன் 24, 2024 10:28 PM
அன்னூர்:காட்டம்பட்டி குளத்தில் அடர்வனத்தில் பவர் டிரில்லர் வாயிலாக பராமரிப்பு பணி செய்யப்பட்டது. காட்டம்பட்டி ஊராட்சி மற்றும் குன்னத்தூர் ஊராட்சியை சேர்ந்த 140 ஏக்கர் குளத்தில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஆறு ஆண்டுகளாக களப்பணி நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு வகையான 1000 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. அவை 12 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்து உள்ளன.
இந்நிலையில் ஜஹோரன்ஸ்கி மோல்டுஸ் மற்றும் மெஷின்ஸ் நிறுவன நிதி உதவி உடன் இரண்டாம் கட்டமாக 400 மரக்கன்றுகள் அடர்வனத்தில் நடப்பட்டன. இங்கு அடர்வனத்தில் மரக்கன்றுகளை சுற்றி அதிகமாக இருந்த களைகள் மற்றும் புற்களை அகற்ற நேற்று முன்தினம் களப்பணி நடந்தது.
பவர் ட்ரில்லரைக் கொண்டு 400 மரக்கன்றுகளுக்கு சுற்றி இருந்த களைகள், புற்கள் அகற்றப்பட்டன. இதில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
'தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை களப்பணி நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் 99422 90932 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.