/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
/
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : செப் 15, 2024 11:49 PM

பொள்ளாச்சியில், அண்ணாதுரையின், 116-வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மாலை அணிவித்தும், மலர்கள் துாவியும் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றச்செயலாளர் ரகுபதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வால்பாறை
வால்பாறை தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 116 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், வால்பாறை நகர செயலாளர் சுதாகர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். விழாவில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், உட்பட பங்கேறறனர்.
* அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் நகர துணைச்செயலாளர் பொன்கணேஷ் தலைமையில் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். விழாவில் நகர அவைத்தலைவர் சுடர்பாலு, நகர இணை செயலாளர் விமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிருபர் குழு -