/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவித்தொகை பெற முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
/
உதவித்தொகை பெற முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
உதவித்தொகை பெற முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
உதவித்தொகை பெற முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 05, 2024 12:32 AM
கோவை : நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களிடம் இருந்து, ஓய்வூதிய உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, மாதம் ரூ.6,000 ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்; அல்லது பங்கேற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், பல்கலைகளுக்கு இடையேயான போட்டிகள், ஒலிம்பிக் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்ட போட்டிகள், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தை சேர்ந்தவராகவும், மாத வருமானம் ரூ.6,000 ஆகவும், வரும், 31ம் தேதி, 58 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் பதிவு செய்தவர்கள், விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள், நகலுடன், அசல் சான்றிழ்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 74017 03489 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.