/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோமையம்பாளையம் குப்பை கிடங்கில் தீ நல்லவேளை வனத்துக்குள் பரவவில்லை
/
சோமையம்பாளையம் குப்பை கிடங்கில் தீ நல்லவேளை வனத்துக்குள் பரவவில்லை
சோமையம்பாளையம் குப்பை கிடங்கில் தீ நல்லவேளை வனத்துக்குள் பரவவில்லை
சோமையம்பாளையம் குப்பை கிடங்கில் தீ நல்லவேளை வனத்துக்குள் பரவவில்லை
ADDED : ஏப் 10, 2024 12:26 AM

வடவள்ளி;மருதமலை அடிவாரத்தில் உள்ள சோமையம்பாளையம் ஊராட்சியின் குப்பை கிடங்கில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கும் குப்பையை, மருதமலை அடிவாரத்தில் உள்ள, ரிசர்வ் சைட்டில் கொட்டி வருகிறது.
இப்பகுதி, வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், காட்டுயானை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள், பிளாஸ்டிக்கை உண்ணும் அவல நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, குப்பைக்கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெரும் கரும்புகை ஏற்பட்டதால், மருதமலை அடிவாரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்வேதா சுமன், தெற்கு ஆர்.டி.ஓ., பண்டரிநாதன் ஆகியோர் நேரில் வந்து, பணிகளை துரிதப்படுத்தினர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதால், வனப்பகுதியில் தீ பிடிக்காமல் தடுக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டனர். வனப்பகுதியை ஒட்டி, அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து, வலியுறுத்தி வருகின்றனர்.

