/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாந்தி பள்ளியில் மன்றம் துவக்க விழா
/
சாந்தி பள்ளியில் மன்றம் துவக்க விழா
ADDED : ஜூலை 03, 2024 09:22 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சாந்தி பள்ளியில், மன்றம் துவக்க விழா நடந்தது. அவ்வகையில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல், கைவினை, பாட்டு, நடனம் மற்றும் நாடகம் ஆகிய மன்றங்கள் துவக்கப்பட்டன.
அதில், இலக்கியம் மன்ற விழாவில், என்.ஜி.எம்., கல்லுாரி உதவி பேராசிரியர் மாரியம்மாள், அறிவியல் மன்ற விழாவில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர் கலைவாணி, சுற்றுச்சூழல் மன்ற விழாவில், வாணவராயர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் முனைவர் விஜயாகவுரி, பைன் ஆர்ட்ஸ் மன்ற விழாவில் டி.என்.கியூ., நிறுவனம் சார்பில் அருண், நடன இயக்குனர் ராகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, மன்ற நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.