/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கொடிசியா' சார்பில் நான்கு நாட்கள் 'எலக்ட்ரோடெக்-2024' கண்காட்சி
/
'கொடிசியா' சார்பில் நான்கு நாட்கள் 'எலக்ட்ரோடெக்-2024' கண்காட்சி
'கொடிசியா' சார்பில் நான்கு நாட்கள் 'எலக்ட்ரோடெக்-2024' கண்காட்சி
'கொடிசியா' சார்பில் நான்கு நாட்கள் 'எலக்ட்ரோடெக்-2024' கண்காட்சி
ADDED : ஆக 06, 2024 11:14 PM
கோவை : 'கொடிசியா' சார்பில், கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், 'எலக்ட்ரோடெக் - 2024' கண்காட்சி, 9 முதல், 12ம் தேதி வரை நடக்கிறது.
இதுதொடர்பாக, 'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன், 'எலக்ட்ரோடெக்-2024' கண்காட்சி தலைவர் பொன்ராம் ஆகியோர், நிருபர்களிடம் கூறியதாவது:
'எலக்ட்ரோடெக்' கண்காட்சி, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. சிறப்பு விருந்தினர்களாக, மொரிஷியஸ் நாட்டு நிதியமைச்சர் சூமில் தத் போலா, பொருளாதார மேம்பாட்டு வாரிய தலைவர் ஹேம்ராஜ் ராம்நியல் சிஷிரி, 'ஸ்னீய்டர் எலக்ட்ரிக்' தமிழ்நாடு மற்றும் கேரள தலைவர் ஜனார்த்தன் தியாகி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் சார்பில், 200 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
9ம் தேதி முதல் 12ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். வர்த்தக நேரம் காலை, 10:00 மணிக்கு துவங்கும். மாலை, 3:00 முதல், 5:00 மணி வரை, பொதுமக்கள் பார்வையிடலாம்.
எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இ-வாகனங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம். 800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு, 50 ரூபாய்.
கேபிள், கெபாசிட்டர்கள், டீசல் ஜெனரேட்டர்கள், மின்னணு பாகங்கள், எனர்ஜி மீட்டர்கள், எல்.இ.டி., விளக்குகள், மோட்டார்கள், சோலார் பேனல்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாதனங்கள், மோட்டார் வைண்டிங் ஒயர்கள், வீட்டு உபயோக மின் சாதனங்கள், மின் இயந்திரவியல் பாகங்கள், மின்சார வாகனங்கள், விளக்குகளுக்கான உதிரி பாகங்கள், மாடுலர் ஸ்விட்சுகள், மைக்ரோ இன்வெர்ட்டர்கள், ஆப்டிகல் பைபர், மாசுக்கட்டுப்பாடு கருவிகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.