/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட்டு, வழிப்பறி நான்கு பேருக்கு சிறை
/
திருட்டு, வழிப்பறி நான்கு பேருக்கு சிறை
ADDED : ஆக 04, 2024 10:35 PM
சூலுார் : சூலுார் உள்ளிட்ட பகுதிகளில், வீடு புகுந்து நகை திருடிய, நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூலுாரை சேர்ந்தவர் பிரின்சஸ், 49. தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த ஜூலை 12ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது மகனை பார்க்க சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, எட்டரை சவரன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
வழக்குப்பதிவு செய்த சூலுார் போலீசார், தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். சி.சி.டி.வி., பதிவுகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
கோவையை சேர்ந்த ரோகன்,24, விஜய், 26, அபிலேஷ், 29 ஆகிய மூவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில், ஈரோட்டை சேர்ந்த முபாரக் அலி, 29 என்பவருடன் சேர்ந்து நகையை திருடியது தெரிந்தது.
இவர்கள், பல்லடம், கருமத்தம்பட்டி, பெரிய நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது தெரிந்தது. 18 சவரன் நகை மற்றும் பைக்கை மீட்ட போலீசார், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.