/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காவது உலக சிலம்ப போட்டி கற்பகம் பல்கலை வீரர்கள் அபாரம்
/
நான்காவது உலக சிலம்ப போட்டி கற்பகம் பல்கலை வீரர்கள் அபாரம்
நான்காவது உலக சிலம்ப போட்டி கற்பகம் பல்கலை வீரர்கள் அபாரம்
நான்காவது உலக சிலம்ப போட்டி கற்பகம் பல்கலை வீரர்கள் அபாரம்
ADDED : செப் 10, 2024 01:19 AM

கோவை;நான்காவது உலக சிலம்ப போட்டியில், கற்பகம் பல்கலை வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.
உலக சிலம்ப சம்மேளனம், அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், கேரள அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில், நான்காவது உலக சிலம்ப போட்டிகள் நடந்தன.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஜிம்மி ஜார்ஜ் ஸ்டேடியத்தில், ப்ரீ, சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில், கற்பகம் பல்கலையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கான கம்பு வீச்சு பிரிவில், கவுதமகிருஷ்ணன், வேல் கம்பு வீச்சு பிரிவில் மதன்பாபு, ஒற்றை வாள்வீச்சு பிரிவில் சவுந்தர்ராஜ், மான்கொம்பு வீச்சு பிரிவில், சஞ்சய், கம்பு சண்டை 50 கிலோ பிரிவில், முத்துப்பாண்டி, 55 கிலோ பிரிவில், மதன்பாபு, 60 கிலோ பிரிவில்,சஞ்சய், 75 கிலோ பிரிவில் தசதரன், ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். ஆண்களுக்கான இரட்டை கம்பு வீச்சில் முத்துப்பாண்டி, இரட்டை வாள்வீச்சில் தசதரன், இரட்டை சுருள் வாள்வீச்சில் தேவ ஆகாஷ், சண்டை போட்டி, 50 கிலோ பிரிவில் சவுந்தர்ராஜ், 60 கிலோ பிரிவில் கவுதமகிருஷ்ணன், 65 கிலோ பிரிவில் தேவஆகாஷ், ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கற்பகம் பல்கலை துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.