ADDED : செப் 03, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 63வது வார்டு ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியரில், 63 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
மாணவியருக்கு, எம்.பி., ராஜ்குமார் சைக்கிள் வழங்கினார். மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தனர். துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், உதவி கமிஷனர் செந்தில் குமரன், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய மண்டல தலைவர் மீனா, 63வது வார்டு கவுன்சிலரான, பணிகள் குழு தலைவர் சாந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை.