தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


ADDED : மே 11, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப்-1, குரூப்-2/2ஏ மற்றும் குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு துவங்குகிறது.

2026ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் இந்தத் தேர்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், போட்டித் தேர்வு புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பாடவாரியான தேர்வுகள், முழுமையான மாதிரித் தேர்வுகள், இலவச பாடக் குறிப்புகள் மற்றும் ஸ்டடி ஹால் வசதியும் வழங்கப்படுகிறது.

பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள், கவுண்டம்பாளையம்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும், 93615 76081 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us