sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இருதயம், நரம்பியல், மனநல குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை முகாம்

/

இருதயம், நரம்பியல், மனநல குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை முகாம்

இருதயம், நரம்பியல், மனநல குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை முகாம்

இருதயம், நரம்பியல், மனநல குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை முகாம்


ADDED : மே 09, 2024 11:32 PM

Google News

ADDED : மே 09, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான இருதயம், நரம்பியல், மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுகளுக்கான, இலவச ஆலோசனை முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து, மருத்துவ மனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவத்துறை செயல்படுகிறது. இதில், இருதயம், நரம்பு, எலும்பு, உளவியல், வயிறு, சிறுநீரகம் தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும், அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது பிரத்யேகமாக குழந்தைகளுக்கான இருதயம், நரம்பியல், மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுகளுக்கான, இலவச ஆலோசனை முகாம், நடத்தப்படுகிறது.

மே 6ம் தேதி துவங்கிய இம்முகாம், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில், தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவர்கள், ஆலோசனை வழங்குகின்றனர்.

சுவாசிப்பதில் சிரமம், தோல் நீல நிறமாக மாறுதல், அடிக்கடி நுரையீரல் தொற்று, உடல் எடை அதிகரிக்காதது, விளையாடும்போது சோர்வு, குடும்பத்தில் யாருக்கேனும் இருதய நோய் இருப்பது, பிறவி யிலேயே இருதய குறைபாடு, மரபணு குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்னைகளால், பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை முதல், 18 வயது வரை உள்ளவர்கள் வரை, இம்முகாமில் பங்கேற்கலாம்.

இவர்களை தவிர வலிப்பு, தலைவலி, பக்கவாதம், தசைநார் சிதைவு, பேச்சில் தாமதம், ஆட்டிசம், கவனமின்மை மற்றும் அதிவேக செயல்தன்மை, பெருமூளை வாதம், அறிவுத்திறன் குறைபாடு, மன அழுத்தம், மனச்சோர்வு, துாக்கமின்மை, வீடியோகேம், செல்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகுதல் உள்ளிட்ட நரம்பியல், வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளும் பங்கேற்கலாம்.

இலவச மருத்துவ ஆலோசனையுடன், பரிசோதனை மற்றும் சிகிச்சையை சலுகை கட்டணத்தில் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us